விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வாரா? - சுதீஷ் பதில்!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:12 am
is-vijayakanth-involved-in-election-rally

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார்; ஆனால் அவரால் பேச முடியாது என தேமுதிகவின் துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளார்களிடம் பேசிய அவர், "அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளதில்  எங்களது கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் மக்களின் நலன் கருதியே இந்த கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். 

முதலாவதாக எங்களது கோரிக்கைகள் குறித்து நாங்கள் பாஜகவிடம் பேசினோம். அவர்கள் ஒத்துக்கொள்ளவே, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. பாமகவுக்கு இணையான தொகுதிகளை கேட்டது உண்மை தான். ஆனால், எங்களது கோரிக்கைகள் மற்றும் நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர சம்மதித்து அதற்கேற்ப தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது. அதன்பின்னரே நாங்கள் கூட்டணியில் கையெழுத்திட்டோம்" என்று கூறினார். 

பின்னர் விஜயகாந்த் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜயகாந்த் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். ஆனால் அவரால் பேச முடியாது. 

அவர் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று தான் கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். அதுவே தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 
தே.மு.தி.க. வேட்பாளர்கள் குறித்து அவர்தான் முடிவு செய்வார். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அவர் தான் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close