மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதில் என்ன அவசரம்? - திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:57 am
dmk-s-case-hearing-at-sc

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது குறித்த திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

17வது நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அந்த 3 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் இல்லை எனவும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

இதையடுத்து, விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இதில், தேர்தல் ஆணையம் மார்ச் 25ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

மேலும், வழக்கின் விசாரணை இடையே நீதிபதிகள் பேசுகையில், "இப்போதே இடைத்தேர்தலை நடத்துவதில் என்ன அவசரம் இருக்கிறது? இந்த தேர்தலுக்கு பின்னர் பொறுமையாக நடத்துவதால் என்ன பிரச்னை? தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் பதிலளித்தால் மட்டுமே உத்தரவிட முடியும்" என்றும் கூறினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close