பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை ! 

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:57 am
pollachi-issue-nakeeran-gopal

பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு பரப்பியதாகக் கூறி நக்கீரன் கோபாலை விசாரணைக்காக மத்திய குற்றபிரிவு சம்மன் அனுப்பி அழைத்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது அவதூறு பரப்பியதாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். 

அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் நக்கீரன் கோபால் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரது வழக்கறிஞர் சிவகுமார் இன்று ஆஜராகி விசாரணைக்கு மறுதேதி குறிப்பிடும்படி மனுவளித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close