ஓபிஎஸ் -இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 02:50 pm
supreme-court-to-hear-two-leaves-case

டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கில் ஓபிஎஸ் -இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து தினகரன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு இருந்து வரும் நிலையில் இன்றும் வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். 

மேலும், குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

இரட்டை இலை சின்னம் வழக்கு: டிடிவி தினகரனின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close