கோவை & மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 03:29 pm
marxist-communist-party-candidates-announced

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோவை மற்றும் மதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி வருகிறது 

அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோவை மற்றும் மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன், கோவையில் முன்னாள் எம்.பி, பி.ஆர்.நடராஜன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close