ஜி.கே.வாசன் & கட்சி நிர்வாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 05:01 pm
gk-vasan-meets-cm-edappadi-palanisamy

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இடைத் தேர்தலில் த.மா.கவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ள நிலையில், இன்று ஜி.கே.வாசன் முதல்வரை சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. 

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close