பொள்ளாச்சி சம்பவம்: திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 05:38 pm
kovai-court-allowed-cbcid-to-investigate-convict-thirunavukkarasu-for-4-days

பொள்ளாச்சி வழக்கில் திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்வதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், சிபிசிஐடி 15 நாட்கள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close