பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு! - நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 07:17 pm
pollachi-assault-case-compensation-for-victim

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை வெளியிட்டதற்காக தமிழக அரசு அந்த பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

பொள்ளாச்சியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது.  இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளது. முன்னதாக மாணவி குறித்த விபரங்களை கோவை மாவட்ட எஸ்.பி ஒருவர் வெளியிட்டிருந்தார். 

பாதிக்கப்பட்டவரின் விபரங்களை வெளியிட்டதற்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்காக புதிய அரசாணையை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று காலை உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் விபரங்களை வெளியிட்டதற்காக, தமிழக அரசு அந்த பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண்ணின் விபரத்தை வெளியிட்ட கோவை காவலதிகாரி மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close