விஜயகாந்தை சந்திக்கிறார் முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 08:58 am
cm-meets-vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கவுள்ளார். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி விஜயகாந்தை மரியாதை  நிமித்தமாக சந்திக்கிறார். மேலும் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். தேமுதிக தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஏற்கனவே துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர்  சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close