அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 09:50 am
aiadmk-party-alliance-constituency-announced-today

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

நேற்று திமுக -கூட்டணி போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

பாஜகவுக்கு கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே முழு விபரம் தெரிய வரும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close