தாமரைக் கோலத்தை அழித்ததால் தமிழிசை ஆவேசம்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 01:08 pm
srivilliputtur-aandal-temple-kolam-issue-tamilisai-condemned

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் போடப்பட்ட கோலத்தில் தாமரை இருந்ததால் அதனை சுண்ணாம்பு கொண்டு அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருவிழாவுக்காக போடப்பட்டிருந்த கோலங்களில் தாமரை இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, கட்சியின் சின்னம் என்று கூறி சுண்ணாம்பு கொண்டு அழிக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழிசை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டு காலமாக வரையப்படும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்துள்ளனர். அது தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படியென்றால் 'கை' காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது. தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா?

இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்புகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதையடுத்து, தேர்தல் கமிஷன், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close