காதல் தம்பதிகள் புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி? - புது வழிகாட்டும் தமிழக அரசு!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 12:18 pm
how-to-get-smart-card-for-love-marriage-couple

காதல் திருமணம் செய்தவர்கள், பெற்றோரை சாராமல் புதிய குடும்ப அட்டையை பெறுவது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சாதாரணமாக, ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிரம்பியிருந்தால் அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில், வாழ்க்கைத்துணையை தேர்வு செய்து, திருமணம் செய்துகொள்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. 

இந்த சூழ்நிலையில், காதல் திருமணம் செய்ததனால் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் பெயர்களை குடும்ப அட்டையில் இருந்து நீக்க மறுப்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களுடன் கூடிய புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில், பதிவு பெற்ற முத்திரைத்தாள் பதிவாளர் முன்னிலையில், தம்பதிகள் இருவரும் கையொப்பமிட்டு, அத்துடன் திருமணப்பதிவு சான்றிதழ், அடையாள அட்டை நகல் கொடுத்து புதிய குடும்ப அட்டையினை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு சம்மதம் என்று குறிப்பிட்ட உறுதிமொழிபத்திரத்தையும் வைத்து சம்மந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கும் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது காதல் திருமணம் செய்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close