பொள்ளாச்சி விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ்ஆப்பிற்கு சி.பி.சி.ஐ.டி கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 02:07 pm
pollachi-assault-case-cbcid-letter-to-facebook-and-whatsapp

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவர்களை ஆபாசமாக  வீடியோ எடுத்த 4 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு ஏற்ப, சி.பி.சி.ஐ.டி போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close