வேட்புமனுத் தாக்கலின் போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி! - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 02:20 pm
parliament-election-2019-tn-election-commissioner-press-meet

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்ய வரும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற மார்ச் 19ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு , "தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது, 4 நபர்களை மட்டுமே உடன் அழைத்து வரவேண்டும். வேட்பாளருடன் மொத்தம் 5 பேருக்கு மேல் இருந்தால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். 

மேலும், வேட்புமனு தாக்கலின் போது 3 வாகனங்களில் மட்டுமே ஆட்கள் வர அனுமதிக்க வேண்டும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எத்தனை பத்திரிகையாளர்களை அனுமதிக்கலாம். இதனை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரே முடிவு செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close