தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை சாலிக்கிரமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் உள்ளிட்ட பலர் விஜயகாந்தை நேரில் சந்தித்த நிலையில், முதலமைச்சர் இன்று விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் போது தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக மூத்த அமைச்சர்கள், தேர்தல் பங்கீட்டு குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
newstm.in