திருநெல்வேலி தொகுதி கேட்டு காங்கிரசார் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 03:34 pm
election-2019-congress-protest-in-tirunelveli

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்து இன்று நெல்லையில்  வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு  திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்பட  10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்து இன்று நெல்லையில் வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close