பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணமும்: இளையராஜா

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 05:05 pm
ilaiyaraja-opinion-about-pollachi-case

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை கூறிவரும் நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

அவர், "பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம். இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழக்கூடாது. பொள்ளாச்சி விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close