பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 05:00 pm
action-will-be-taken-against-parties-to-advertise-police

சென்னையில் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்ததாக பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுதல், சுவரில் கட்சிகள் விளம்பரப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விதிகளை மீறி மதில் சுவரில் போஸ்டர் ஒட்டியதாக கூறி, பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது ராயலா நகர், கேகே நகர், எம்ஜிஆர் நகர், மாம்பலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close