நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 06:31 pm
nirmaladevi-get-bail

 

பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்து  வழக்கில் கைது செய்யப்பட்டு  11 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இந்நிலையில் நிர்மலா தேவியின் வழக்கு , நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. 

விசாரணைக்கு பின்னர்; வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஊடகங்களுக்கோ , தனிநபருக்கோ பேட்டி அளிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி  நீதிபதி உத்தரவிட்டார்.
 
இது குறித்து பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் : தற்போது நிர்மலாதேவியின் ஜாமீன் ஆவணங்களை நீதிமன்ற நடைமுறையில் காண்பித்த பின், செவ்வாய் கிழமையன்று ஜாமீனில் நிர்மலாதேவி வெளியே வருவார் என்ற தகவலை  தெரிவித்துள்ளார்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close