மன்மோகன் சிங்கின் ஜிஎஸ்டி கருத்துக்கள் வரவேற்கத்தக்கது: பியூஷ் கோயல்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 09:23 pm
piyush-goyal-appreciates-manmohan-singh-s-gst-comments

ஜிஎஸ்டியை வெற்றிகரமாக அமல்படுத்தியற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு விருது வழங்கியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மன்மோகன் சிங்கை பாராட்டியுள்ளார்.

மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் நல்ல கருத்துக்கள், வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியபோது, "ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசுகிறார்கள். ஆனால், ஜிஎஸ்டி பற்றிய மன்மோகன் சிங் அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.

பாரதிய ஜனதா கூட்டணி, 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்த்து தேர்தலில் போட்டியிடுவதாகவும்; கூட்டணி சேர்ந்துள்ள அத்தனை தமிழக கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை ஆட்சியில் அமர வைக்க காத்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close