போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் விபரங்களை வெளியிடத் தடை!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 09:05 am
pollachi-case-dgp-rajendran-sent-notification-to-all-district-hq

போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடக்கூடாது என அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனும் அந்த பெண்ணின் விபரங்களை செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார். 

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு புதிய அரசாணையை வெளியிடவும், விபரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக, தமிழக அரசு அந்த பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், கோவை மாவட்ட எஸ்.பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை காவல்துறை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என்று தமிழக டிஜிபி ராஜேந்திரன், அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவ்வாறு விதிமுறைகளை மீறும்பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close