தலிபான் தீவிரவாதிகள் 94 பேரை கொன்று குவித்த ஆப்கான் படைகள்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 09:13 am
afghanistan-nearly-100-militants-killed-in-past-24-hour

ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய 24 மணி நேர தாக்குதலில் சுமார் 94 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஒடுக்கும் பணியில் ஆப்கான் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த நிலையில், அந்நாட்டின் ஆப்கான் மேற்கு பகுதியில் பாக்திஸ் என்ற மாகாணத்தில் ஆப்கான் படைகள் நாடு முழுவது பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த 24 மணி நேர இந்த தாக்குதலில், முதலில் 51 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது இந்நிலையில், தற்போது இதில் 100 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close