'வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கி வைக்கல, அதுக்குள்ளவா?' - வைரலாகும் ஹர்பஜனின் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 09:27 am
harbhajan-singh-tweet-for-ipl-2019

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருப்பதையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வழக்கம் போல் தமிழ் மொழியில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார்.  அவரது ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன் சிங், கடந்த ஐ.பி.எல் போட்டி முதலே, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்தவர். அவரது தமிழ் ட்வீட்டுக்கே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு என்றே கூறலாம். 

அந்த வகையில், வருகிற மார்ச் 23ம் தேதி முதல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குவதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். இதில் கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஒரு சிலர் நேற்றே சென்னை வந்தனர். 

இந்நிலையில், ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல @msdhoni பாட்டு போட நான் @mvj888 @JadhavKedar டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த @ChennaiIPL லோட ஆட்டத்த #YelloveAgain" என்று பதிவிட்டு ஷூட்டிங் வீடியோவையும் டேக் செய்துள்ளார்.

ஹர்பஜனின் இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close