அதிமுக & கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:23 pm
admk-alliance-party-constituency-announced

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில் இன்று எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பை அதிமுக சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். 

அதிமுக: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென் சென்னை.

பாமக : தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்.

பாஜக : கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம்.

புதிய நீதி கட்சி : வேலூர். 

புதிய தமிழகம்: தென்காசி. 

தமிழ் மாநில காங்கிரஸ்: தஞ்சாவூர். 

என்.ஆர். காங்கிரஸ் : புதுச்சேரி.

தேமுதிக: கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை, விருதுநகர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close