விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு...சிதம்பரத்தில் தொல்.திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:23 pm
vck-candidates-announced

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுவார் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர்களை குறித்த அறிவிப்பை வெளியிட்ட தொல். திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக கட்டாயப்படுத்தவில்லை. எனவே ஒருதொகுதியில் தனிச்சினனத்தில், ஒரு தொகுதியில் பிரபலமான சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை முடிவை அறிவிக்கவில்லை.

ஆந்திராவில் 6 மக்களவைத் தொகுதியிலும், கேரளாவில் 3 தொகுதியிலும் போட்டியிடுகிறோம்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close