40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்: வைகோ

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:30 pm
dmk-alliance-will-win-in-40-constituencies-vaiko

ஈரோடு மட்டுமல்லாமல் 40 தொகுதிகளிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாட்டின் பாதுகாப்பில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்பது ரஃபேல் விவகாரத்திலேயே தெரிந்து விட்டதாக கூறினார். காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகளின் பங்களிப்புடன் மத்தியில் அமையும் ஆட்சி கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும் என்றும், ஈரோடு மட்டுமல்லாமல் 40 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close