கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இல்லை: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:40 pm
there-is-no-disagreement-within-the-coalition-parties-tamilisai

கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் அதிமுகவுடனான தொகுதி பங்கீடு ஒப்பம் இன்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "தற்போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இதர கூட்டணி கட்சிகள் மட்டுமே தற்போது இந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம். மற்றபடி கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு என்பது இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி பாஜக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்போம்" இவ்வாறு கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close