தனித்தொகுதிகள் ஒரு பார்வை: 5 தொகுதிகளை கையில் எடுத்திருக்கும் அதிமுக!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:48 pm
reserved-constituency-admk-vs-dmk

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம், தென்காசி, திருவள்ளூர் ஆகிய 7 தனித்தொகுதிகள் உள்ளன. இவற்றில், இந்தாண்டு அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அவை: சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம். 

திமுகவை பொறுத்தவரை நீலகிரி, தென்காசி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக போட்டியிடுகிறது. மற்ற 4 இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. 

வருகிற மக்களவைத் தேர்தலில் அதிமுக 5 தனித்தொகுதிகளை கையில் எடுத்துள்ளது சிறுபான்மையின மக்களின் வாக்குகளையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஆளும் கட்சி 5 தனித்தொகுதிகளை கருத்தில் கொண்டுள்ளது கூட ஒரு தேர்தல் வியூகம் தான் என அதிமுகவிற்கு மற்ற கூட்டணி கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன. 

தனித்தொகுதி என்பது தாழ்த்தப்பட்ட/பழங்குடியின மக்களுக்கான தொகுதி. அந்த தொகுதியில் தாழ்த்தப்பட்ட/பழங்குடியின மக்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும். 

தனித்தொகுதிகளில் அதிமுக & கூட்டணி 

தனித்தொகுதிகள் அதிமுக & கூட்டணி திமுக & கூட்டணி
சிதம்பரம் அதிமுக விசிக
நீலகிரி அதிமுக திமுக
நாகப்பட்டினம் அதிமுக இந்திய கம்யூ.
திருவள்ளூர் அதிமுக காங்கிரஸ்
காஞ்சிபுரம் அதிமுக திமுக
விழுப்புரம் பாமக விசிக
தென்காசி புதிய தமிழகம்  திமுக

newstm.in

அதிமுக & கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

தி.மு.க & கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close