மெகா கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி: ஹெச்.ராஜா

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:02 pm
mega-coalition-is-a-naturally-formed-coalition-h-raja

தங்களின் மெகா கூட்டணி இயல்பாகவே அமைந்த கூட்டணி என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், " அதிமுக-பாமக-பாஜக-தேமுதிக- புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் மெகா கூட்டணி இயல்பாக அமைந்துள்ளதாகவும், அனைத்து தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். 

இடைத்தேர்தல் மூலமாக ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், அதற்காக பல்வேறு விமர்சனங்களை பிரதமர் மோடி மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் மீது வைத்தார்கள் என்றும் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் ஏற்கனவே தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் தொகுதி அறிவிப்பின் போது கலந்து கொள்ளவில்லை எனவும், கலந்து கொள்ளாததற்கு எந்தவித கருத்து வேறுபாடும் காரணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close