சிவகங்கையில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெறும்: கே.எஸ்.அழகிரி

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:07 pm
congress-will-win-in-sivagangai-ks-azhagiri

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின் பட்டியல் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில தேர்தல் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றதாகவும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறினார்.  

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதனடிப்படையில், தலைமை காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை  20 ஆம் தேதி டெல்லியிலிருந்து வெளியிடுவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 

இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு 300க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக சுமார் 60 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் விருப்ப மனுக்கள் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

பாஜகவுடன் சிவகங்கை மற்றும் கன்னியாகுமாரி தொகுதிகளில் நேரடியாக  போட்டியிடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சிவகங்கையை பொருத்தவரை எதிர்த்து போட்டியிடக்கூடிய வேட்பாளர் எச்.ராஜா என்பதால் அங்கு நிச்சயமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும், கன்னியாகுமரியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால். காங்கிரஸ் கட்சி மிகக்கடுமையான நடவடிக்கையில் ஈடுபடும் என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால் வடக்கிற்கும், தெற்கிற்குமான இடைவெளி குறையும் என தெரிவித்தார். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close