தென்காசி(தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி போட்டி!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:06 pm
krishnasamy-is-going-to-contest-in-tenkasi

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி, தென்காசி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், புதிய தமிழகம் கட்சிக்கு  தென்காசி(தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்காசி தொகுதியில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணசாமி, திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close