வேட்பாளர் பட்டியலுடன் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 06:16 pm
stalin-s-honor-at-karunanidhi-memorial

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடவுள்ளார். இந்நிலையில் அவர், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார் 

மேலும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் பட்டியலை அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close