திமுக நேரத்திற்கு நேரம் நிறம் மாறும் பச்சோந்தி: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 12:45 pm
dmk-is-chameleon-chief-minister

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு  தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினால். அப்போது அவர் கூறியதாவது: 

"அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி தர்மத்துடன் கூடிய கூட்டணியாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவில் மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட சிறு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. வலுமையான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்  மீண்டும் ஆட்சி அமைய வேண்டும்.

மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாததால் அவரை தலைவராக கருணாநிதி அறிவிக்கவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழா கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ராகுலை பிரதமராக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை சந்திரபாபு நாயுடு ஏற்க மறுத்து விட்டார். திமுக நேரத்திற்கு நேரம் நிறம் மாறும் பச்சோந்தியாக உள்ளது.

அதிமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் உழைக்கும் வர்கம். திமுக கூட்டணி பதவிக்கான கூட்டணி. எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. கடந்த தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணி இது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட கட்சி ஆட்சி செய்தால் மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக அமல்படுத்திட முடியும்.

பாஜக மதவாத கட்சி இல்லை. பதவி அதிகாரம் கொடுத்தால் பாஜக மதவாத கட்சி அல்ல என திமுக கூட்டணி கட்சியினரே தெரிவிப்பார்கள். மக்கள், திமுக சொல்லும் பொய்களை கேட்டுக்கொண்டுதான் உள்ளனர்.

10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் தொடர்ச்சியாக பதவி வகித்து வந்தபோதும், திமுக தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணவில்லை. கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற அதிமுக கூட்டணி பாடுபடும் என்று அப்போது முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close