ஈரோடு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டி: மதிமுக அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 11:58 am
erode-mdmk-candidate-contest-in-election-with-own-symbol

ஈரோடு மக்களவைத் தொகுதியில் அ.கணேசமூர்த்தி தனிச்சின்னத்தில் போட்டியிடுவார் என மதிமுக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அக்கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

மேலும், திமுகவின் உதயசூரியன் அல்லது தனிச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மதிமுக கூறியிருந்த நிலையில், ஈரோடு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக சற்றுமுன் மதிமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்குகிறதோ அந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் வேட்பாளர் கணேச மூர்த்தி வருகிற 25ம் தேதிவேட்புமனுத்தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close