திமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 03:37 pm
the-goal-is-to-bring-down-the-dmk-congress-coalition-thambidurai

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம் என நாடளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.  

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக மற்றும்  கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். எங்கள் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது.

மாநிலத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி தலைமையிலான அரசும் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் ஆர்வமாக தொண்டர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களின் நோக்கமே இந்த தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பது தான். தமிழகத்தின் பரிணாம வளர்ச்சியில் உள்ளது அதிமுக. ஆகவே இந்த ஆட்சி தொடர்ந்து இருப்பதற்கு மக்கள் ஆதரவு தந்து வருகின்றனர்" என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close