தமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்! வீடியோ உள்ளே..

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 06:13 pm
admk-candidate-asks-people-to-vote-tamilisai

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் சின்னப்பன், தமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அதேபோன்று, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக சின்னப்பன் போட்டியிடுகிறார். நேற்று விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே சின்னப்பனுக்கு வரவேற்பு அளித்தனர் அதிமுகவினர். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி தொகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடனும், பிரதமராக இருந்து நாட்டை காக்கும் மோடியின் ஆசிபெற்ற நமது கூட்டணி வேட்பாளர் அன்பு சகோதரி 'கனிமொழி' என தவறாக கூறினார். இது அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் சிரிப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் உடனே சுதாரித்து, 'தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாக்களியுங்கள்' என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close