அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மசிருக்கு சமம்: செல்லூர் ராஜூ

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 04:11 pm
those-who-have-strayed-from-the-aiadmk-are-equal-to-hair-sellur-raju

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மோடி ஜி மட்டும் தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி செயல்பாடு குறித்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ஆகியோர் பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனும்,  அமைச்சர் செல்லூர் ராஜூம் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேசுகையில், 

40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக நினைத்து பணியாற்ற வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். மதுரையில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. எனவே நாங்கள் மதுரை தொகுதியில் வலுவாக இருக்கிறோம். சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் கம்யூனிஸ்ட்டை கட்சியை எதிர்க்கிறோம். எங்கள் கூட்டணி மதுரை சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனைத் தோற்கடிக்கும் என்றார்.

தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், அதிமுகவில் இருக்கும் வரை அனைவரையும் அலங்கரிக்கும் முடியாக பார்ப்போம். அதிமுகவில் இருந்து விலகி சென்றால் வெறும் மசிராக தான் பார்ப்போம்.  வலிமையான பாரதத்தை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் மோடி ஜி தான். எளிமையானவர். ஆற்றல் மிக்கவர். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மோடி ஜி மட்டும் தான். அவரை மீண்டும் பிரதமராக்கி, மறைந்த அப்துல்கலாம் கூறியது போன்று இந்தியாவை வல்லரசாக்குவோம் என கூறினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close