சேலம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 05:26 pm
salem-child-rape-case-judgement

சேலம் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பரமசிவம- பழனியம்மாள் தம்பதியரின் மகள் பூங்கோடி(10) என்ற சிறுமி அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று 5 பேரும் மதுபோதையில் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த இடத்திலே சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கின் விசாரணை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று, இவ்வழக்கில் குற்றவாளிகள் பூபதி, ஆனந்த், ஆனந்த் பாபு, பிரபாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close