தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருவார்: திருநாவுக்கரசர் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 12:21 pm
thirunavukarasar-press-meet

திருச்சி மக்களவைத் தொகுதியில் வருகிற மார்ச் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் மீண்டும் தமிழகம் வருவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்ட காரணத்தால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். 

இந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜக தலைமையிலான கூட்டணி, கடந்த 5 ஆண்டுகளாக ஒரு மோசமான ஆட்சியை தான் கொடுத்துள்ளது. 

சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். திருச்சி மக்களவை தொகுதியில் வருகிற மார்ச் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் மீண்டும் தமிழகம் வருவார்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close