திருப்போரூர், மேல்மருவத்தூரில் இன்று பிரச்சாரம் செய்கிறார் ஓபிஎஸ்!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 08:50 am
ops-compaign-for-election-2019

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று திருப்போரூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்,  காஞ்சிபுரம் மக்களவை வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூரில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

அதன்பின்னர், செய்யூர் சட்டசபை தொகுதி மற்றும் மேல்மருவத்துாரில் பிரசாரம் செய்ய இருக்கிறார் என அதிமுக தலைமை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close