3 மாவட்ட இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இலவச வேலைவாய்ப்பு முகாம்

  முத்து   | Last Modified : 24 Mar, 2019 11:29 am
free-job-fair-for-degree-students

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நெல்லையில் நேற்று (சனிக்கிழமை) இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

தனியார் நிறுவனங்கள் equally India , நெல்லையச் சேர்ந்த வீடென், ரோட்டரி கிளப், Indian Confideration Industries, CIA தூத்துக்குடி branch ஆகிய தனியார் நிறுவனங்கள் இணைந்து நெல்லையில் உள்ள சதக்க அப்துல்லா கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாமினை நடத்தியது. 

இந்த முகாமில் சுமார் 85 நிறுவனங்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் தமிழகத்தில்  இருந்து கலந்து கொண்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி  ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 2,800 காலி பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு நடைபெற்றது. 

படித்த இளைஞர்களுக்கு ஒரு வழி காட்டுதலாக அவர்கள் எந்த பணியை தேர்வு செய்யலாம், சுயதொழில் தொடங்கலாமா? போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கமும் முகாமில்  நடைபெற்றது.

இது பல நிறுவனங்களின் அனுபவம் வாய்ந்தவர்களால் நடத்தப்பட்டது. அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. 

குறிப்பாக சாப்ட்வேர் நிறுவனத்தில் மெக்கானிக் வேலைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே போல் மெடிக்கல் சயின்ஸ், ஹோட்டல் மேனேஜ் மென்ட், டிப்ளோமோவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. வருங்காலத்தில் புதிய அரசு அமைகின்ற வேளையிலே இந்த தென்மாவட்டங்களில் அதிகமான தொழில் நிறுவனங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக வைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close