40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிமுன் அன்சாரி

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 12:53 pm
thamimun-ansari-press-meet-after-met-mk-stalin

40 மக்களவை தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதையடுத்து, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினார். பின்னர், வருகிற நாடளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக தலைவரிடம் முக்கியமான 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி பிரச்சாரம் செய்யும்" என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close