கொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த திட்டம்: முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 08:15 pm
planning-to-blame-me-for-kodanad-affair-chief-minister

கொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அரக்கோணத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து  முதல்வர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசும்போது, "கொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், சாதிக்பாட்ஷா மரணம் மற்றும் அவரது மனைவி கார் மீதான தாக்குதல் குறித்து அதிமுக விசாரித்து வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என திமுக கூறியிருப்பதை குறிப்பிட்ட அவர், "ஜெயலலிதா மரணத்திற்கு காரணமே திமுக தான்" என குற்றம்சாட்டினார். மேலும், "திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்றும், மக்களுக்கு நன்மை செய்ய கூடியதையே அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது" எனவும் முதல்வர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close