அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 10:33 am
case-filed-on-ammk-candidate-thanga-tamilselvan

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தில் வரும் ஏப்.180-ஆம் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி, கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போது அதிக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது, கடும் வெயிலில் கூட்டங்கள் நடத்தக் கூடாது, கூட்டம் நடைபெறும் இடத்தில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. 

இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன், பிரச்சாரத்தின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக, அவர் மீது போடி நகர போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close