சபாஷ்... சரியான போட்டி...தமிழிசை, கனிமொழி ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 03:25 pm
tamilisai-kanimozhi-filed-nomination

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இன்று பாஜக வேட்பாளர் தமிழிசை மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணிச் செயலரும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி போட்டியிடுகிறார். அதேபோன்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், இன்று பிற்பகல் தமிழிசை சௌந்தரராஜன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனுவை அளித்தார். உடன் பாஜக தொண்டர்கள் பலர் வந்திருந்தனர். 

அதைத்தொடர்ந்து, சில நிமிடங்களில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்தார். இருவருமே எதிரெதிர் கட்சிகளின் பெண் தலைவர்கள் என்பதால் போட்டி அதிகமாகவே இருக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close