தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை: கே.பாலகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 04:26 pm
election-commission-did-not-act-honestly-k-balakrishnan

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நேர்மையாக  இல்லை எனவும் பாரபட்சமாக செயல்பட்டுவருவதாகவும்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை காந்திபுரம் சி.பி.எம் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை எனவும், அதிமுக, பா.ஜ.க வேட்பாளர்கள் வரம்பு மீறினால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது இல்லை எனவும் தெரிவித்தார். 

தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே சின்னங்கள் கொண்ட  பேட்ஜ்களை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும், இது வரம்பை மீறிய செயல் எனவும் குறிப்பிட்ட அவர், தேர்தல் விதிமீறல்கள் குறித்து கட்சி சார்பில் நாளை விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். 

சூரிய வெப்பம் அதிகமாக இருப்பதால் அதிமுக, பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் என்ன பேசுகின்றோம் என தெரியாமல் பேசி வருவதாக தெரிவித்த அவர், மதுரை சி.பி.எம் வேட்பாளர் அவராக விலகி விடுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும், ஒரு அமைச்சர் பேசுவதை போல அவர் பேசுவதில்லை எனவும் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close