தமிழகத்தில் கொடூரம்! கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதில் 15 கர்ப்பிணி பெண்கள் மரணம்

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 01:04 pm
15-women-dead-due-to-spoilt-blood

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த மருத்துவர்கள் நடத்திய சோதனையில், கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த வாரங்களில் அரசு அதிகாரிகள், அரசு மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரத்த வங்கிகளில் ரத்தங்கள் கெட்டுப்போன நிலையில் இருந்ததும், இதற்கு முன்னதாக, கெட்டு போன ரத்தத்தை செலுத்தியதில் 15 கர்ப்பிணி பெண்கள் மரணமடைந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை, 4 மாதங்களில் மட்டும் இந்த மூன்று மாவட்ட அரசு மருத்துவமனையில், கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை பெற்ற தாயார்கள் என 15 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக, துறை ரீதியாக உடனடி கடும் நடவடிக்கை எடுக்க, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள், ரத்த வங்கியில் பணியாற்றிய ஊழியர்கள் என இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வழக்கமாக ரத்தத்தை 42 நாட்கள் முறையாக கெட்டுப்போகாமல் பராமரிக்க முடியும். குறைந்தது 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பநிலையில் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தியிருக்க வேண்டும். மின்தடை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னதாகவே ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும். 

மேலும், கெட்டுப்போன ரத்தமாக இருந்தால் அதை மருத்துவர்கள் பார்த்தஉடனே கண்டுபிடித்துவிடலாம். செவிலியர்களுக்கும் தெரியும். அவ்வாறு இருக்க இது எப்படி நடந்தது என்பது புரியாத புதிராக உள்ளது. முழுமையான விசாரணையில் தான் உண்மை வெளிவரும்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close