கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 04:03 pm
national-human-rights-commission-chennai-sent-notice-to-medical-dept-director

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில், கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் உள்ள முதன்மை அரசு மருத்துவமனைகளில், அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த மருத்துவர்கள் நடத்திய திடீர் சோதனையில், கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மருத்துவக் கல்வி இயக்குனருக்கு, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் இறந்த விவகாரத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர், மருத்துவ இயக்குனர் அறிக்கை தரவும்,  எய்ட்ஸ் கட்டுப்பட்டு வாரியத்தின் திட்ட இயக்குனர் 2 வாரத்தில் பதில் அளிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

தமிழகத்தில் கொடூரம்! கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதில் 15 கர்ப்பிணி பெண்கள் மரணம்

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close