'மிஷன் சக்தி' சாதனையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்! - தமிழிசை ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 05:44 pm
tamilisai-press-meet

'மிஷன் சக்தி' சாதனையை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அவர்களின் இயலாமையை காட்டுகிறது என தமிழிக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக அரசு 'மிஷன் சக்தி' என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது.  ஆனால் எதிர்க்கட்சிகள், இதனை விமர்சித்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். பாஜக கூட்டணியை எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பது அவர்களின் இயலாமையை காட்டுகிறது. 

தூத்துக்குடி மக்களை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, வருகிற 2ம் தேதி தூத்துக்குடிக்கு வரவிருக்கிறார். அந்த தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார். குற்றப்பரம்பரை என தெரிவித்ததை சிலர் தவறாக சித்தரிக்கின்றனர்.

ஏழைகளுக்கு ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக கூறி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றுகிறது. நான் வெற்றி பெற்றால் தூத்துக்குடியில் பன்னாட்டு விமான நிலையம், புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close