20 அடி கூட குழந்தைகளை விளையாட விட முடியவில்லை: கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 06:30 pm
kamal-haasan-talks-about-kovai-child-rape-case

வீட்டில் இருந்து 20 அடி தூரத்தில் குழந்தைகளை விளையாட விட முடியாவிட்டால் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் எனக்கூறுவதில் அர்த்தம் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குழந்தையின் பெற்றோரை பார்த்துவிட்டு வந்துள்ளேன். அவர்களுக்கு நியாயம் கிடைத்ததாக தெரியவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.  

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தேர்தல் வேலையில் இருப்பதால் இந்த விவகாரம் குறித்து நேரில் சந்திக்க தங்களுக்கு நேரம் அளிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

வீட்டில் இருந்து 20 அடி தள்ளி குழந்தைகளை விளையாட அனுப்ப முடியாவிட்டால், அது பாதுகாப்பான தமிழகம் இல்லை. பதட்டத்தை தணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் என்பதால் உடனடியாக வரமுடியவில்லை. இல்லையென்றால் எப்போதோ வந்திருப்பேன். 

இது போன்ற சம்பவங்ளை தடுக்க எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. மிகச்சிறிய ஊரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரியல்ல. தேர்தலை விட குழந்தையின் பெற்றோரின் கவலையும், குழந்தையின் மரணமும் தான் முக்கியம்.

குழந்தைகளின் மீதான குற்றங்கள் அதிகம் நடக்கும் இடம் தமிழகம் என ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அப்படி இருக்க கூடாது என்றாலும் இந்த சம்பவங்கள் அது உண்மைதானோ என அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறை நினைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இந்தக் குற்றவாளியை கண்டுபிடிக்க இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரிசு வாங்க கூடாது. குற்றவாளி குறித்து தகவல் அறிந்தால் அவனை காட்டி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close